Feb 24, 2011

ஸ்பெக்டரம் ஊழலும் துரோகப் பட்டியலும்!

ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது
முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன்
காரணம் இதுவே...

கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது.
அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே
நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே.
தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம்
கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ
போட்டிகள் இல்லை.

விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம்
நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்
என்னவென்றால், நாம் தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி
நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை.
குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.



செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை
உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய அன்றைய அரசு
ஒரு தொலைத் தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே
நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே
இருக்கிறது.

2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல்.
2008-ல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி
டெபொசிட் அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள்
சேவையை தொடங்க வேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பின்னால் உதவும்) டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம்
வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து
கொள்ளுங்கள்.

நியாய கணக்கு...

இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15
நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு
நிமிடத்துக்கு 40 பைசா கட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய்,
ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x 6.0 = 360
கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800
கோடிகள். ஒரு வருடத்துக்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008-ல் 2G
ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்படியெனில்,
குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு
வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டு வருடத்துக்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம்,
இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்று
சொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின்
செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை
நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும்
கணினி காண்பிப்பது, "INFINITIVE".

இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை
சென்று அடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த
ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே
தாக்கப்போகிறது. எப்படி..?

விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள்
நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும்
ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம்,
மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து
ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள்,
இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம் - 1

உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும்
அதிகம் மதிப்புள்ள (உதாரணம் S.TEL நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300,
1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம் - 2

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு
அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல
தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம் - 3

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்
இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட்
நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள்
போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது
கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத
பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை
சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும்
கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை
இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம்
வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம் - 4

MTNL, BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி
போதிய ஆப்பரேடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்
நிமிடத்துக்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால்
பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை
பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற
நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

துரோகம்-6

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG, தொலைதொடர்பு துறை தொடர்பாக
கைப்பற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள்
புறகணிப்பு, சட்ட, நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள்
புறகணிப்பு.. இப்படி அடுக்கடுக்காக ஆதாரங்கள், சாட்சிகள். முதலில்
வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை
கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7

இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
ஒப்புக் கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய்
பிரசாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன்
உச்சகட்டம்தான் 2G-யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய
அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான்
புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பு.

துரோகம்-8

நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய்
மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை
இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து
இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள்,
தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு,
அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி
இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை
நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு
இழைக்கபட்ட துரோகம் எண் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக
வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு
இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள்
ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை
உறிஞ்சுவதோடு மட்டுமின்றி, நோய்க் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு
செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுற்றி சுற்றி
அடிக்கும். எப்படி?

ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு,
அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு
ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள், அந்தப் பணத்தை வைத்து அதே
இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க
முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள்
எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை. ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து
போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல்
பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது
இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும்
கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல்
எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த
விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக
விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த
ஏழை, பணக்காரன் இடைவெளியை குறைக்கத்தான் அரசு ஒன்றை மக்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர்.

இலவசம் வாங்கும் மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை
தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள்
வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிப் பணத்தை
செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இது
நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால், உங்கள்
வாழ்க்கை தரமும் மாறபோவதில்லை.

*
SOURCE: http://new.vikatan.com/news.php?nid=965
--
Read more

Feb 22, 2011

TIME- YOUR MOST PRECIOUS RESOURCE

When the angel of death came to Joe Smith, to accompany him to his real home, Joe dismissively responded “I am not ready to die as I have so much left to do. Do you mind coming back later?”

the Angel replied, sorry your time is up and we must leave now.

Joe enquired, “don’t you know who I am? I am Joe Smith, one of the richest men in the world.

The Angel nodded “I know all about you as I do everyone else; now hurry along, Let’s go.”

Joe pleaded; “if I were to give you 10% of my fortune, which is over a billion dollars, will you turn a blind eye and return a year later?”

The Angel shook his head and replied, “you don’t seem to understand Joe. It is time to go”

For the next few moments, Joe tried his best to negotiate with the angel giving away more of his fortune for lesser time. He finally succumbed and offered “if I were to give you all my fortune, which is 10 billion dollars, will you give me 5 minutes so that I can call my wife and children and tell them that I love them? I have never told them this and it is very important to me that they know how I feel about them. I also need to seek forgiveness from 2 people that I have hurt the most. All I ask is 5 minutes!”


The Angel paused and looked at Joe curiously and asked, “how long did it take you to make your 10 billion dollars?”

Joe replied, “30 years my friend – it took me a whole 30 years – it’s a great deal in exchange for 5 minutes, take it – you will never have to work another day in your life. “

The Angel shook his head and said “I really do not understand you human beings! If you are willing to give up 30 years of your lives’ work for 5 minutes, then why did you not make the most of every minute while you had it? How did you value your time? Where were your priorities? Why did you not say or do the things that really mattered?”


The lights went off a second later, Joe was gone.


His 10 billion dollars could not buy him the time to do what really mattered.
Read more

search

AdBrite